Jaya Jaya Shankara..Hara Hara Shankara..
Hara Hara Shankara..Jaya Jaya Shankara..
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare..
Hare Krishna Hare Krishna  Krishna  Krishna Hare Hare..

 
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் சில: (நன்றி : தினமலர்-வாரமலர்)
   
ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர் முதலியவர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவ வேண்டும்.
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.
குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவருந்தக்கூடாது.
நெருப்பை வாயால் ஊதக்கூடாது.
சாப்பிடும் போது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் நீர் அருந்தக்கூடாது.
குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி , ஆலயம் இங்கெல்லாம் செல்லும்போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.
 
வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது.
ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.
ஒரு காலால் இன்னொரு காலை தேய்த்து கழுவக்கூடாது.
பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், அடுத்தவன் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளகூடாது.
பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல், மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
 
பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
ரிஷி, புரோகிதர், குரு, ஜோதிடர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்த்ரியின் நடத்தை இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களீடம் உள்ள தவறுகளை விளம்பரபடுத்தவோ கூடாது.
 
நம்மை ஒருவர் கேட்காதவரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.
   

All rights reserved.manthiras.com-2009-2011

Designed and hosted by www.sriwebsolutions.com