வாராஹம் பன்றி முகத்துடன் காட்சி தரும் அன்னை வாராகி, பராசக்தியின் படைத்தலைவி ஆவாள். தேவர்கள், அசூரர்கள் மற்றும் மனிதர்கள் என அனைவராலும் போற்றப்படுபவள்.
திருவானைக்காவலில் அன்னை அகிலாண்டேஸ்வரியாகவும், தசமஹா வித்யையில் அன்னை பகளாமுகியாகவும் அருள்புரியும் அன்னை வராகியின் சக்தி அளவிடமுடியாதது.

பார்பதற்கு மிக உக்ரமாக காட்சி தந்தாலும், மிகவும் அன்பானவள். தன்னை அண்டிவயர்களின் துயரை நீக்கி வளமான வாழ்வை அளித்து காப்பவள். கோபத்தில் உச்சம் இவளே. அன்பு காட்டுவதிலும், ஆதரவு காட்டுவதிலும் இவளுக்கு நிகர் இவளே.

எதையும் அடக்கும் வல்லமை
யும்,பலத்தில் மிருக பலமும், குணத்தில் தேவகுணத்தையும் உடையவள். ஊழிக்காலத்தில் உலகை பாதுகாத்த பெருமை இவளையே சாரும். 

மிகவும் துடிப்பானவள். மிகவும் வேகமானவள்.

சப்தமாதர்களில் மிகவும் வேறுபட்டவள். சப்தமாதர்களில் ஐந்தாவதாக தோன்றியவள். பராசக்தி வாராகியின் துணை கொண்டே
14 உலகங்களையும் வெற்றி கொண்டாள். பண்டாசூரனை பராசக்தி வதம் செய்ய துணை புரிந்தவள் இவளே.

ராரா சோழனின் வெற்றி தெய்வம் இவளே. இவளை வழிபட்டே ராரான் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டான். ராரானுக்கு தோல்வியில்லா நிலையை தந்தவளும் இவளே.தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பிருந்தே வாராகி வழிபாடு செய்திருக்கிறான் ராரா சோழன். இன்றும் தஞ்சை பெரிய கோவிலில் ஒரு வழக்கம் உண்டு. பொதுவாக எல்லா கோவில்களிலும் முதலில் விநாயகருக்குத் தான் வழிபாடுகள் நடக்கும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் முதலில் வாராகிக்குத் தான் பூசைகள் நடக்கும். சோழர்கள் வாராகியின் அருள் கொண்டே போர்களில் வெற்றி வாகை சூடினர்


தர்மத்தை காப்பவள்.பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவாள்.எதிரிகளை அழிப்பவள். செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள். பயத்தினை போக்குபவள். வெற்றியைத் தருபவள்.  எல்லா நலன்களையும் தருபவள்.


வாராகியை வழிபடுவது மிகவும் எளிது. பக்தர்கள் அழைத்தால் ஓடோடி வருவாள். 
 
தி.ஸ்ரீனிவாசராமன்.
 
 
 
  All rights reserved.Manthiras Divine Service.